புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:16:39+05:30)

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம்


விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி மெயின்ரோட்டை சேர்ந்தவர் ஞானவேல் (வயது 32). இவர் பங்க் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் கடையில் திடீர் ஆய்வு செய்தனர். அங்கு 275 ஹான்ஸ் பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, ஞானவேலை கைது செய்தனர்.


Next Story