புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் வெங்கமேடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. அதன்பேரில், வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெங்கமேடு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த துரைசாமி (வயது 51) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story