புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கரூர்
தென்னிலை அருகே கரைப்பாளையத்தை சேர்ந்தவர் மணி (வயது 55). இவர் தென்னிலை-சின்னதாராபுரம் சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் இவரது டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக தென்னிலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தென்னிலை சப்-இன்ஸ்பெக்டர் தில்லைக்கரசி, டீக்கடையை சோதனை செய்தார். அப்போது அங்கு புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்கள் விற்றதாக மணியை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story