ரூ.4¼ லட்சம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்


ரூ.4¼ லட்சம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

ரூ.4¼ லட்சம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா உத்தரவின் பேரில் அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் நேற்று அதிகாலை பூதலூர் அருகே உள்ள வில்வராயன்பட்டி சாலையில் பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டுகள் திருமால், செல்லத்துரை ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்றை வழிமறித்து நிறுத்திய போது அதில் இருந்த 3 பேர் தப்பி ஓட முயற்சித்தனர்.அவர்களை மடக்கி பிடித்து மினிலாரியில் சோதனையிட்டபோது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் 3 பேர் மற்றும் மினி லாரி மற்றும் அதிலிருந்து கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்களை பூதலூர் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். கைப்பற்றப்பட்ட லாரியில் 800 கிலோ எடையுள்ள 33 மூட்டை தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ4 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு வந்த பூதலூர் வில்வராயன்பட்டி பாத்திமா கார்டன் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் (வயது27), கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தலப்பில் பகுதியை சேர்ந்த அப்துல் ரஹீம் (28), மலப்புரம் தோட்டக்கல் பகுதியைச் சேர்ந்த முகமது முஷின் (25) ஆகியோரை கைது செய்தனர்.


Next Story