பொய்யாதநல்லூர் அரசு பள்ளியில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்


பொய்யாதநல்லூர் அரசு பள்ளியில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
x

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் பொய்யாதநல்லூர் அரசு பள்ளியில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

அரியலூர்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை பெற்றவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் மத்திய அரசினால் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் தொலை தூரங்களில் இருந்து அடையாள அட்டை பெற வரும் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில் அடையாள அட்டை வழங்க குறுவட்ட அளவில் 20 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு பொய்யாதநல்லூர் குறுவட்டத்திற்கு இன்று (வியாழக்கிழமை) பொய்யாதநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், சுத்தமல்லி குறுவட்டத்திற்கு 10-ந் தேதியன்று சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர், மன நல மருத்துவர் மற்றும் கண் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளார்கள். மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 மற்றும் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.


Next Story