பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் இன்றுஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 9,480 பேர் எழுதுகின்றனர்
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 9480 பேர் எழுதுகின்றனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 9480 பேர் எழுதுகின்றனர்.
பொதுத்தேர்வு
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் உள்பட மொத்தம் 67 பள்ளிகள் உள்ளன. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி, 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி, பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது. கல்வி மாவட்டத்தில்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மாணவர்கள் 4792 பேரும், மாணவிகள் 4688 பேரும் சேர்த்து மொத்தம் 9480 பேர் எழுதுகின்றனர்.
மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு 47 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதை தவிர தனித்தேர்வர்களுக்கு ஆச்சிப்பட்டி பரத் வித்யா நிகேதன் பள்ளியிலும் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
போலீஸ் பாதுகாப்பு
இந்த நிலையில் பொதுத்தேர்விற்கு வினாத்தாள்கள் பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் வினாத்தாள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வினாத்தாள்கள் பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். மையங்களில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் முதன்மை கண்காணிப்பாளர்கள் 52 பேரும், அறை கண்காணிப்பாளர்கள் 600 பேரும் தேர்வு பணியில் ஈடுபடுகின்றனர். இதை தவிர தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க 50 பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வால்பாறை
வால்பாறை தாலுக்கா பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட 11 பள்ளிக் கூடங்களைச் சேர்ந்த 534 மாணவ மாணவிகள் இன்று தொடங்கி வருகின்ற 20 ஆம் தேதி வரை நடைபெறக்கூடிய 10-ம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள். வால்பாறை அரசு மேல் ஆண்கள் நிலைப்பள்ளியில் 167, வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 59, சோலையாறு அணை அரசு மேல்நிலைப் பள்ளியில் 43, அட்டகட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 4,சிங்கோனா அரசு உயர் நிலைப் பள்ளியில் 9,ரொட்டிக்கடை அரசு உயர்நிலைப்பள்ளியில் 17, வாட்டர்பால்ஸ் அரசு உயர்நிலைப்பள்ளியில் 13, காடம்பாறை அரசு உயர்நிலைப்பள்ளியில் 1,தூய இருதய மேல் நிலைப்பள்ளியில் 70, தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 83,பியூலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 68 ஆக மொத்தம் 534 மாணவ -மாணவிகள் 7 தேர்வு மையங்களில் 10 பொதுத் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்வு மைய பள்ளி நிர்வாகங்கள் செய்துள்ளனர்.