திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தொடர் மழையால் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
திருவாரூர்
தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்றும்(வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story