இன்று சுதந்திர தினவிழா:கள்ளக்குறிச்சியில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தேசியக்கொடி ஏற்றுகிறார்
சுதந்திர தினவிழாவையொட்டி கள்ளக்குறிச்சியில் கலெக்டர் ஷ்ரவன் குமார் இன்று தேசியக்கொடி ஏற்றுகிறார்.
கள்ளக்குறிச்சி
நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி, காலை 9.05 மணியளவில் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்த உள்ளார். அதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் முன்னிலையில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக் கொள்கிறார். அதன்பிறகு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினர் மற்றும் அரசுத்துறை, மருத்துவத் துறையில் பணிபுரிந்தவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
Related Tags :
Next Story