இன்று பவுர்ணமி கிரிவலம்
கூடலூர் சிவன்மலையில் இன்று பவுர்ணமி கிரிவலம் நடக்கிறது.
நீலகிரி
கூடலூர்
கூடலூர் அருகே நம்பாலக்கோட்டையில் உள்ள சிவன்மலையில் மாதந்தோறும் பவுர்ணமி திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று (திங்கட்கிழமை) குரு பூர்ணிமா பவுர்ணமி விழா நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு சிவலிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 11 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு பவுர்ணமி கிரிவல தரிசனம் நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் செல்கின்றனர். தொடர்ந்து மாலை 5 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story