இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை)நடக்கிறது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள பிரதான கூட்டரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடக்கிறது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story