அரியலூரில் இன்று இளைஞர் திறன் திருவிழா


அரியலூரில் இன்று இளைஞர் திறன் திருவிழா
x
தினத்தந்தி 6 Jan 2023 12:43 AM IST (Updated: 6 Jan 2023 1:09 PM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் இளைஞர் திறன் திருவிழா இன்று நடக்கிறது.

அரியலூர்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா (தமிழ்நாடு கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு) திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதில் 5-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த வேலைவாய்ப்பற்ற 18 முதல் 45 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு ஆண், பெண் (இருபாலரும்) திரளாக கலந்துகொண்டு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பினை பெற்று பயனடையலாம். மேலும், இத்திருவிழாவில் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ் 20-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்பு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் கலந்து கொண்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பினை வழங்க உள்ளார்கள். வருகை தரும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும். அத்துடன் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை நகல், கல்வி சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story