இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு


இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு
x

தஞ்சை நகரில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை நகரில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணி

தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கருப்பையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள நகரதுணை மின் நிலையத்தில் நேற்று நடைபெற இருந்த துணை மின் நிலைய பராமரிப்பு பணி, அவசர பணி காரணமாக நிர்வாக காரணங்களால் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதனால் இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்டேடியம் வழித்தடத்தில் மேம்பாலம், சிவாஜிநகர், சீதாநகர், சீனிவாசபுரம், ராஜன்ரோடு, தென்றல் நகர், கிரி ரோடு, காமராஜர் ரோடு, ஆபிரகாம் பண்டிதர் நகர், திருநகர், ஆண்டாள் நகர், எஸ்.பி.குளம், விக்னேஸ்வராநகர், உமாசிவன்நகர், வெங்கடாசலபதி நகர், பி.ஆர்.நகர், ஜெபமாலைபுரம், சுந்தரபாண்டியன்நகர், டி.சி.டபிள்யூ.எஸ். காலனி, களிமேடு-3, களிமேடு-4.

திலகர் திடல்- கீழவாசல்

திலகர் திடல் வழித்தடத்தில் மேலவீதி, தெற்கு வீதி, பெரியகோவில், செக்கடி ரோடு, மேல அலங்கம்.வண்டிக்காரத்தெரு மின் வழித்தடத்தில் ரெயிலடி, சாந்தப்பிள்ளை கேட், மகர்நோன்புச்சாவடி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி.கோவில் தெரு, சேவியர் நகர். சோழன்நகர்.சர்க்யூட் ஹவுஸ் வழிடத்தடத்தில் ஜி.ஏ.கேனல் ரோடு, திவான்நகர், சின்னையாபாளையம், மிஷன்சர்ச் ரோடு, ஜோதிநகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர்.கீழவாசல் வழித்தடத்தில் பழைய மாரியம்மன்கோவில் ரோடு, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத்தெரு, பழைய பஸ் நிலையம், கொண்டிராஜபாளையம்.

தொலைபேசி எண்கள்

மர்க்கெட் வழித்தடத்தில் பர்மாபஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், என்.என்.எம்.ரகுமான்நகர், அரிசிக்காத்தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, வாடிவாசல் கடைத்தெரு.வ.உ.சி.நகர் வழித்தடத்தில் மகளிர் போலீஸ் ஸ்டேசன், வ.உ.சி.நகர்.பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 94987 94987 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story