தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்...!
தமிழகத்தில் இன்று 32 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்று புதிதாக 13 ஆண்கள், 19 பெண்கள் உள்பட மொத்தம் 32 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 5 பேர் உள்பட மொத்தம் 15 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. திண்டுக்கல், தர்மபுரி, கடலூர், அரியலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.
மேலும், 12 வயதுக்குட்பட்ட 14 குழந்தைகளுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்ட 8 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 170 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 385 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story