தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்...!
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மலேசியாவில் இருந்து வந்த ஒருவர் உள்பட 4 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்பட 3 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 35 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் கொரோனா தோற்றால் இன்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
மேற்கண்ட தகவல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story