தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு...!


தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு...!
x

தமிழகத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் உள்ளது. கடந்த சில தினங்களாகவே தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் இன்று புதிதாக 3 ஆண்கள், 1 பெண் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை உள்பட 3 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 35 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் கொரோனா தோற்றால் இன்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story