இன்றைய தங்கம் விலை நிலவரம்: சவரனுக்கு ரூ.520 குறைந்தது!!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.37,920க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த கடந்த 1ஆம் தேதியிலிருந்து ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 65 ரூபாயும், சவரனுக்கு 520 ரூபாயும் அதிரடியாக குறைந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,805க்கும், சவரன் ரூ.38,440க்கும் விற்கப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.65 குறைந்து, ரூ4,740 ஆகவும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.37,920க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 2 ரூபாய் குறைந்து ரூ.62.50க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.2000 குறைந்து ரூ.62,500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.