இன்றைய புகைப்படத் தொகுப்பு (05-07-2022)

கும்பாபிஷேகத்தையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது.

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ட்ரோன் மூலம் உரமிடுதல் குறித்த செயல்விளக்கம் நடைபெற்றது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புவனா என்கிற விஜி என்ற 25 வயது பெண் சிங்கம் உயிரிழந்தது.

மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: மதுப்பிரியர்களால் பெண் சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தல்..!

குமரி கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

பழனி பாலசமுத்திரம் அருகில் இயற்கை பின்னணியில் பச்சை நிற போர்வையை போர்த்தியடி காட்சி அளிக்கும் வயல்வெளி.

நெல்லையப்பர் கோவிலில் நேற்று இரவு சாமி வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தையொட்டி அரிசியை மலை போல் குவித்து அதன் மேல் அன்னபூரணி சிலையை வைத்து அன்ன பூஜை நடைபெற்றது.

கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு காட்சி முனைப்பகுதியில் சமவெளியை மறைத்த மேகக் கூட்டங்கள் கடல் அலைகள் போல காட்சியளிக்கும் கண்கொள்ளா காட்சி.

கனவை கலைத்து சென்ற கருமேக கூட்டங்கள்: காரைக்குடிபகுதியில் வானம் கருமேகமூட்டத்துடன் காணப்பட்டதால் மழை பெய்யும் என எதிர்பார்த்த மக்களை ஏமாற்றும் வகையில் கருமேக கூட்டங்கள் கலைந்து சென்றது.

மருத்துவ குணங்கள் நிறைந்த துரியன் பழங்கள் காய்க்க தொடங்கியுள்ளது.
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ட்ரோன் மூலம் உரமிடுதல் குறித்த செயல்விளக்கம் நடைபெற்றது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire
















