பூதகுடி சுங்கச்சாவடியில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு


பூதகுடி சுங்கச்சாவடியில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு
x

விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பூதகுடி சுங்கச்சாவடியில் இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்து உள்ளனர்.

புதுக்கோட்டை

பூதகுடி சுங்கச்சாவடி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பூதகுடி சுங்கச்சாவடி உள்ளது. இந்த வழியாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலகு மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டருக்குள்ளாக இருக்கும் சுங்கச்சாவடிகளில் ஏதாவது ஒன்று மூடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது பூதகுடி சுங்கச்சாவடி மூடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்தநிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் சுங்கச்சாவடியில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட இலகு ரக வாகனங்களுக்கு 5 சதவீதமும், கனரக வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் தொகையிலிருந்து 10 சதவீதம் அதிகமாகவும் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கட்டணம் உயர்வு

அதன்படி கார், ஜீப், வேன் (லைட்) உள்ளிட்ட வாகனங்களுக்கு பழைய கட்டணம் ரூ.95-க்கு பதிலாக ரூ.5 உயர்ந்து ரூ.100 புதிய கட்டணமாகவும், எல்.சி.வி., எல்.ஜி.வி., மினி பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு பழைய கட்டணமாக ரூ.155-ம் தற்போது ரூ.10 உயர்ந்து ரூ.165 புதிய கட்டணமாகவும், பஸ், டிரக் (2 ஆக்சில்) உள்ளிட்ட வாகனங்களுக்கு பழைய கட்டணம் ரூ.325-லிருந்து புதிய கட்டணம் ரூ.345 ஆகவும், 3 ஆக்சில் கமர்சியல் வாகனங்களின் பழைய கட்டணம் ரூ.355-லிருந்து புதிய கட்டணம் ரூ.375 ஆகவும், எச்.சி.எம். (4-6 ஆக்சில்) வாகனங்களுக்கு பழைய கட்டணம் ரூ.510-லிருந்து தற்போது ரூ.540 ஆகவும், ஓவர்சைஸ் வாகனங்களுக்கான பழைய கட்டணம் ரூ.625-லிருந்து தற்போது ரூ.655 ஆகவும் உயர்த்தி சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வானது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்து உள்ளனர்.


Next Story