சுங்கச்சாவடி ஊழியர்கள் பிச்சை கேட்கும் போராட்டம்
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் பிச்சை கேட்கும் போராட்டம்
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணிபுரிந்து வந்த 28 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் தொடர் போராட்டம் நேற்று 35-வது நாளாக நீடித்தது. இதில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தரையில் மண்டியிட்டு கையேந்தி மடி பிச்சை கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பணி நீக்கம் செய்யப்பட்ட எங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட போனஸ்களை உடனே வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வயலியுறுத்தி கோஷம் எழுப்பினர். சுங்கச்சாவடியில் பாஸ்ட் டேக் முறையில் தொடர்ந்து வாகனங்களுக்கு பணம் வசூல் செய்யும் முறை நடைபெற்று வருகிறது. அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story