கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை உயர்வு

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை உயர்வு
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, குடிமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 500 பெட்டி தக்காளிகள் மட்டும் விற்பனைக்கு வந்திருந்தது. கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில் தக்காளி சீசன் தொடங்க இன்னும் சில மாதங்கள் உள்ளதால் தற்போது குறைந்த அளவு தக்காளி கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. தற்போது ஜூன் மாதம் தொடங்கி விட்டதால் அதிக அளவில் முகூர்த்த சீசன்களும் உள்ளதால் தக்காளி தேவை அதிகரித்துள்ளது. தொடர்ந்து மூகூர்த்தசீசன்கள் வர உள்ளதால் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு வரும் தக்காளிகளுக்கு கூடுதல் விலை கிடைக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி 25 ரூபாய்க்கு ஏலம் போனது. ஆனால் நேற்று நடைபெற்ற ஏலத்தில் தக்காளி விலை மீண்டும் அதிகரித்து 40 ரூபாய்க்கு ஏலம் போனது. ஒரே நாளில் தக்காளி ஒரு கிலோவிற்கு 15 ரூபாய் அதிகமாக ஏலம் போனதால் தற்காலிகளை ஏலம் எடுக்க வந்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். கிணத்துக்கிடவு தினசரி காய்கறி சந்தையில் மொத்த விலையில் தக்காளி விலை ஒரு கிலோ 40 ரூபாய்க்கு ஏலம் போனதால் தற்போது கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள கடைகளில் தக்காளி ஒரு கிலோ 45 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.






