சென்னையில் தக்காளி விலை இன்று மீண்டும் சதமடித்தது..!
சென்னையில் தக்காளி விலை இன்று மீண்டும் சதமடித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் பெரும் அளவில் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தக்காளி சாகுபடி குறைந்ததே விலை உயர்வுக்கான முக்கிய காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் தக்காளி விலை இன்று மீண்டும் சதமடித்துள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி,நேற்று கிலோ ரூ.95-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 5 ரூபாய் அதிகரித்து மீண்டும் கிலோ ரூ.100ஐ எட்டியுள்ளது. மொத்த விற்பனையில் 5 ரூபாய் அதிகரித்ததால் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.140 வரை விற்கப்படுகிறது.
பீன்ஸ் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாம்பார் வெங்காயம் நேற்று ரூ.80 வரை விற்ற நிலையில் இன்று கிலோ ரூ 130க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story