உழவர் சந்தைகளில் தக்காளி விலை வீழ்ச்சி


உழவர் சந்தைகளில் தக்காளி விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 19 Aug 2022 8:15 PM GMT (Updated: 19 Aug 2022 8:15 PM GMT)

தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் உழவர் சந்தைகளில் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதே நேரத்தில் பீன்ஸ் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சேலம்

தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் உழவர் சந்தைகளில் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதே நேரத்தில் பீன்ஸ் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் உழவர் சந்தைகளில் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதே நேரத்தில் பீன்ஸ் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உழவர் சந்தைகள்

சேலத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாபேட்டை மற்றும் புறநகரில் ஆத்தூர், மேட்டூர் உள்பட பல்வேறு இடங்களில் 11 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகளில் அதிகாலை முதல் காலை 10 மணி வரை காய்கறிகளை வாங்க பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கிறார்கள்.

தற்போது தக்காளி வரத்து அதிகரிப்பால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தக்காளி ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.14 வரைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், நாட்டுத்தக்காளி வரத்தும் அதிகமாக உள்ளதால் அதை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பீன்ஸ் விலை

இதேபோல், உழவர் சந்தைகளுக்கு பெங்களூரு, ஓசூர், ஊட்டி, மேட்டுப்பாளையம், ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெள்ளை, பச்சை நிற ரக பீன்ஸ் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், தொடர் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு பீன்ஸ் கிலோ ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.70 முதல் ரூ.80-க்கு விற்ற பச்சை பீன்ஸ் தற்போது ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story