தக்காளி விலை வீழ்ச்சி


தக்காளி விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 24 July 2023 9:30 PM GMT (Updated: 24 July 2023 9:30 PM GMT)

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி ஏற்பட்டது. கிலோ ரூ.86-க்கு ஏலம் போனது.

கோயம்புத்தூர்


கிணத்துக்கடவு


கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி ஏற்பட்டது. கிலோ ரூ.86-க்கு ஏலம் போனது.


15 டன் தக்காளி


கிணத்துக்கடவு பகுதிகளில் இருந்து தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து இல்லாததால் சுல்தான்பேட்டை, நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் தக்காளிக்கு கூடுதல் விலை கிடைத்து வந்தது. அதன்படி கடந்த மாதம் இறுதியில் ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் ரூ.108 வரை ஏலம் போனது. இதனால் சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனையானது.


இந்தநிலையில் நேற்று முன்தினம் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு கிணத்துக்கடவு, நெகமம், செஞ்சேரிமலை ஆகிய பகுதிகளில் இருந்து 15 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. அதற்கு முந்தைய நாள் சந்தை விடுமுறை என்பதால், அதிகளவு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 3 டன் தக்காளி மட்டும் விற்பனைக்கு வந்தது. தொடர் மழை பெய்து வருவதால் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு தக்காளி வரத்து குறைந்தது.


விலை வீழ்ச்சி


இதையடுத்து நடந்த ஏலத்தில் ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் ரூ.86-க்கு ஏலம் போனது. இதனால் கடந்த மாதத்தை விட தக்காளி கிலோவிற்கு ரூ.22 குறைவாக ஏலம் போனது. தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதால், கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள காய்கறி கடைகளில் தக்காளி விலை குறைந்து உள்ளது. கிலோ ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனையான தக்காளி, சில்லறை விற்பனை கடைகளில் ரூ. 90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.



Next Story