தக்காளி விலை வீழ்ச்சி


தக்காளி விலை வீழ்ச்சி
x

பழனி பகுதியில், தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திண்டுக்கல்

பழனி அருகே பாப்பம்பட்டி, கரடிக்கூட்டம், அய்யம்பாளையம், காவலப்பட்டி ஆகிய பகுதிகளில் தக்காளி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவை விற்பனைக்காக பழனி, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. சில வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாகவும் வந்து காய்கறியை கொள்முதல் செய்கின்றனர்.

இந்நிலையில் தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளதால், கடந்த சில தினங்களாக சந்தையில் வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பலர் சரக்குவேனில் வைத்து நேரடியாக தக்காளி விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி பழனி நகர் பகுதியில், விவசாயிகள் பலர் தக்காளியை நேரடியாக விற்று வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மார்க்கெட்டுகளில் தக்காளி கிலோ ரூ.5 முதல் 6 வரை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் எங்களுக்கு போதிய லாபம் இல்லை. எனவே நாங்களே சில்லறை விற்பனையில் ரூ.10 முதல் 12 வரை விற்பனை செய்கிறோம் என்றனர்.

1 More update

Next Story