தக்காளி விலை கடும் வீழ்ச்சி


ேவதாரண்யம் பகுதியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

ேவதாரண்யம் பகுதியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

கும்பகோணத்தில் இருந்து வருகிறது

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு தினந்தோறும் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து வேன்கள் மூலம் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் வேதாரண்யம் மார்க்கெட்டுகளில் கடந்த வாரம் வரை ஒரு கிலோ தக்காளி ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டன.

தக்காளி விலை வீழ்ச்சி

நேற்று தக்காளி விலை கடும் விழ்ச்சி அடைந்தது. 1 கிலோ தக்காளி 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் 2 கிலோ முதல் 5 கிலோ வரை வாங்கி சென்றனர். கால்நடை வளர்ப்போர் 10 கிலோ முதல் 20 கிலோ வரை மொத்தமாக வாங்கி சென்று ஆடு, மாடுகளுக்கு உணவாக கொடுத்தனர். விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story