தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகம்


தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகம்
x

வெம்பக்கோட்டையில் அறுவடை பணிகள் முடிந்தது. தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டையில் அறுவடை பணிகள் முடிந்தது. தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

தக்காளி சாகுபடி

வெம்பக்கோட்டை ஒன்றியம் ஆவாரம்பட்டி, கஸ்தூரி ரெங்கபுரம், நடுவப்பட்டி அருகே உள்ள மைப்பாறை ஆகிய பகுதிகளில் தக்காளி குறைந்த அளவில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை முழுமையாக முடிந்து விட்டது. தற்போது தக்காளி பற்றாக்குறை காரணமாக விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்குள்ள விவசாயிகளிடம் இருந்து தக்காளி கிலோ ரூ.20-க்கு வாங்கி சென்று கிலோ ரூ.100 வரை விற்பனை செய்து வந்தனர். தற்போது முகூர்த்த நேரமாக இருப்பதால் தக்காளி விலை கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை வியாபாரிகள் வாங்கி சென்று ரூ.120-க்கு விற்பனை செய்கின்றனர்.

விலை கிடு கிடு உயர்வு

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

தக்காளி விளைச்சல் குறைவாக இருந்தாலும், விலை அதிகமாக இருப்பதால் மகிழ்ச்சியுடன் சாகுபடி செய்தோம்.

ஆனால் தற்போது வெம்பக்கோட்டை பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி அனைத்தும் அறுவடை செய்யப்பட்டு விட்டது. மகசூல் நன்றாக இருந்தது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்த விலை ஆரம்பத்தில் இல்லை. தற்போது தக்காளிக்கு கடும் கிராக்கி உள்ள நிைலயிலும் வியாபாரிகள் எங்களிடம் ரூ.30 முதல் ரூ.40 வரை தான் கொள்முதல் செய்கின்றனர். இனி வருகின்றன காலங்களில் மழை பெய்தால் தக்காளி வீணாகி விட கூடாது என்ற காரணத்தால் அவர்கள் கேட்கும் விலைக்கு தக்காளியை கொடுத்து விடுகிறோம். விவசாய விளை பொருட்களுக்கு அரசு ஆதார விலை நிர்ணயித்து யாரும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story