தக்காளி கிலோ ரூ.100-க்கும் விற்பனை


தக்காளி கிலோ ரூ.100-க்கும் விற்பனை
x

திருவண்ணாமலையில் தக்காளி, அவரை கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தக்காளி, அவரை கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

தக்காளி விலை உயர்வு

உணவில் தக்காளியின் பங்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். எந்தக் குழம்பு வைத்தாலும் தக்காளி பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. குழம்பில் புளியை குறைத்துக் கொண்டு தக்காளியை கூடுதலாக சேர்த்து கொண்டால் அது தனி ருசியாக இருக்கும் என்பவார்கள்.

இந்த நிலையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் தக்காளி கிலோ ரூ.10-க்கும், ரூ.15-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த சமயத்தில் இல்லத்தரசிகள் தங்களின் வீட்டு தேவைக்கு 3 கிலோ, 4 கிலோ என தேவைக்கு அதிகமாகவே வாங்கி சென்றனர்.

இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே திருவண்ணாமலையில் தக்காளியின் விலை உயரத் தொடங்கியது.

கிலோ ரூ.40-க்கும், ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி இன்று திருவண்ணாமலை உழவர் சந்தையில் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் உள்பட பொதுமக்கள், வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதனால் அவர்கள் குறைந்த அளவிலேயே தக்காளியை வாங்கி செல்கின்றனர்.

முகூர்த்த நாட்கள்

அதுமட்டுமின்றி அவரை, பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி திருவண்ணாமலை உழவர் சந்தையில் (ஒரு கிலோ) பீன்ஸ் ரூ.90-க்கும், அவரைக்காய் ரூ.100-க்கும், உருளைக்கிழங்கு ரூ.36-க்கும், பூண்டு ரூ.100-க்கும், கத்தரிக்காய் ரூ.40-க்கும், முருங்கைக்காய் ரூ.100-க்கும், கேரட் ரூ.48-க்கும், வெண்டைக்காய் ரூ.36-க்கும், பாகற்காய் ரூ.48-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வைகாசி மாதம் பிறந்ததை அடுத்து இந்த வாரத்தில் இருந்து முகூர்த்த நாட்கள் பல வர உள்ளன. இதனால் மேலும் காய்கறிகளின் விலை உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

வாணாபுரம்

வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில் இன்று காலை ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சிடைந்துள்ளனர்.

இப்பகுதி வியாபாரிகள் பெங்களூரு, ஓசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்து வந்து இப்பகுதிகளில் விற்பனை செய்கிறார்கள். அங்கு தக்காளி விளைச்சல் குறைந்து, வரத்தும் குறைவாக உள்ளதால் விலை உயர்ந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story