சாலையோரம் கொட்டப்பட்டுள்ள தக்காளி
விலை குறைவால் உடுமலை பகுதியில் சாலையோரம் தக்காளி கொட்டப்பட்டுள்ளது.
தளி
விலை குறைவால் உடுமலை பகுதியில் சாலையோரம் தக்காளி கொட்டப்பட்டுள்ளது.
தக்காளி சாகுபடி
உடுமலை பகுதியில் ஆண்டு முழுவதும் பல்வேறு பட்டங்களில் தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலவிய கடும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை, காலநிலை மாற்றம் காரணமாக தக்காளி சாகுபடி பரப்பளவு குறைந்ததோடு, உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தக்காளியின் விலை மளமளவென உயர்ந்து கிலோ ரூ.180-க்கும் மேலாக விற்பனையானது.
அதைத் தொடர்ந்து ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடிக்கு திரும்பினார்கள். அதன் பயனாக உற்பத்தியும் அதிகரித்தது. இதனால் அதன் விலையும் படிப்படியாக குறைந்து தற்போது ரூ. 15 வரையிலும் விற்பனை ஆகிறது. விற்பனை மந்தமடைந்து உள்ளதால் பழுத்த தக்காளியை சீரான இடைவெளியில் பறிக்க முடியாத சூழல் உள்ளது. அதைத்தொடர்ந்து ஒரு சில விவசாயிகள் சாலையின் ஓரத்தில் தக்காளியை கொட்டி வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதை தவிப்பதற்காக பற்றாக்குறை உள்ள பகுதிக்கு தக்காளியை விற்பனைக்கு அனுப்பி வைப்பதற்கு வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயற்சி
அத்துடன் தக்காளியில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதற்கு விவசாயிகளுக்கு பயிற்சியுடன் வழிகாட்டுதலும் வழங்க வேண்டும்.இதனால் தக்காளியில் உலர்பவுடர், சாஸ், ஜாம், தொக்கு, ஊறுகாய், ஜூஸ் என பல்வேறு பொருட்கள் தயாரித்து அதன் மூலம் இழப்பை செய்ய முடியும்.அதுமட்டுமின்றி குளிர் பதன கிடங்கு அமைத்து தக்காளியை பாதுகாத்து பயன்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.இதனால் திடீர் விலை உயர்வால் பொதுமக்களும் பாதிப்பு அடைய மாட்டார்கள். விவசாயிகளின் வாழ்வாதாரமும் காப்பாற்றப்படும் என்று விவசாயிகள் கூறினர்.