பெரியநாயகி அம்மன் கோவிலில் மயான கொள்ளை
தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் மயான கொள்ளை
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மயான கொள்ளை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மயான கொள்ளை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி பெரியநாயகி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனையுடன் சக்தி கரகம் எடுத்துவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் விநாயகர், காளி, சிவன் வேடமிட்டு ஊர்வலமாக மணிநதிக்கு சென்றனர். அங்குள்ள மயானத்தில் ஆடுகள் மற்றும் கோழி பலி பூஜையுடன் மயான கொள்ளை நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story