நாளை குரூப்-1 முதல்நிலைத் தேர்வு- 3.16 லட்சம் பேர் விண்ணப்பம்


நாளை குரூப்-1 முதல்நிலைத் தேர்வு-  3.16 லட்சம் பேர் விண்ணப்பம்
x

முதல்நிலைத் தேர்வு நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது

சென்னை

18 துணை கலெக்டர்கள், 26 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர், 25 வணிகவரி உதவி ஆணையர், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி,) கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி வெளியிட்டது.

இந்த பதவிகளுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்தவகையில் முதல்நிலைத் தேர்வுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த மாதம் (அக்டோபர்) 30-ந்தேதி இந்த தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அது தள்ளிவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது.

இந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்ட முதல்நிலைத் தேர்வு நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டு இருக்கிறது. தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது


Next Story