திண்டுக்கல் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை


திண்டுக்கல் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
x

திண்டுக்கல் மாவட்டத்திற்கு நாளை (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேக விழா நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி பாலாலய பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து கோவிலில் கோபுர உச்சியில் உள்ள சிலைகள், உள்பிரகாரங்கள் வர்ணம் பூசும், மராமத்து பணிகளும் முழு வீச்சில் நடந்து வந்தது. இந்த நிலையில் நத்தம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் (7-9-2022) நாளை காலை 11 - 12 மணிக்குள் நடைபெற உள்ளது.

இந்நிலையில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நாளை (7-9-2022) திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

விடுமுறையை ஈடு செய்யும் வகையில் (01.10.2022) சனிக்கிழமை அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களும் வேலை நாளாக செயல்படும் என மாவட்டஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நத்தம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் வெளியூர்களிலிருந்து பெருமளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Next Story