போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு, மடத்துக்குளம் வக்கீல்கள் சங்கம் சார்பில் போதைப்பொருள் மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜயகுமார் புகையிலை ஒழிப்பிற்கான உறுதிமொழியை வாசித்தார். அதன் பின்பு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.பேரணி நீதிமன்ற வளாகத்தில் இருந்து துவங்கி பழனி-உடுமலை சாலை, பஸ் நிலையம், நான்கு வழி சந்திப்பின் வழியாக சென்று மீண்டும் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.
அப்போது மாணவ-மாணவிகள் புகையிலை மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் மக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தினர்.மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி உள்ளிட்ட போலீசார், மடத்துக்குளம் வக்கீல் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.