சிவகாசியில் சாரல் மழை
சிவகாசியில் சாரல் மழை பெய்தது.
விருதுநகர்
சிவகாசி,
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழுந்து குமரிக்கடல் நோக்கி நகர்ந்து வரும் நிலையில் விருதுநகர் உள்ளிட்ட சில கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்து இருந்தது. இந்தநிலையில் சிவகாசியில் நேற்று காலை முதல் மாலை வரை விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. தொடர்ந்து மழை பெய்யவில்லை என்றாலும் விட்டு, விட்டு பெய்த மழையால் பகல் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. மழை பெய்யும் என வானிலை மையம் அறிவிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
Related Tags :
Next Story