கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவிக்கு சித்ரவதை...


கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவிக்கு சித்ரவதை...
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவிக்கு சித்ரவதை...

கோயம்புத்தூர்

பேரூர்

கோவையை அடுத்த கோவில்பாளையம் அருகே குரும்பபாளையத்தைச் சேர்ந்தவர் 33 வயது பெண். இவர் ஐ.டி. கம்பெனி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில், இவரது கணவரான நந்த கோபாலுக்கும், ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். இதனை அறிந்த அவரது மனைவி, தனது கணவரை கண்டித்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து அவர் தனது கள்ளக்காதலியுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தனது மனைவியை எப்படியாவது கழற்றி விட்டு விட வேண்டும் என்று நினைத்த நந்த கோபால் தனது, கள்ளக்காதலியுடன் சேர்ந்து கொண்டு மனைவியிடம், உனது பெற்றோரிடம் சென்று பணம் வாங்கி வா...என்று கூறி துன்புறுத்தி உள்ளார். மேலும் அவரது உருவத்தை கேலி செய்தும் சித்ரவதை கொடுத்து வந்துள்ளார். இதற்கு கணவரின் தாய், தந்தை உடந்தையாக இருந்துள்ளனர்.

இதுகுறித்து, அந்த பெண் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் உரிய விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து கணவர் நந்த கோபால் (34), மாமனார், மாமியார், கணவரின் கள்ளக்காதலி ஆகிய 4 பேர் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story