தமிழ்நாடு அணிக்கு ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பை


தமிழ்நாடு அணிக்கு ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பை
x

தமிழ்நாடு அணிக்கு ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பை கிடைத்தது.

விருதுநகர்

சிவகாசி,

தமிழ்நாடு டென்னிகாய்ட் சங்கம், ஹட்சன் டென்னிகாய்ட் சங்கம் ஆகியவை இணைந்து தென் மண்டல சீனியர் தேசிய டென்னிகாய்ட் சாம்பியன்ஷிப் போட்டி சிவகாசியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய 6 மாநிலங்களில் இருந்து 72 வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டிகள் குழுவாகவும், மற்றும் தனிநபர், இரட்டையர் போட்டியாகவும் நடைபெற்றது. இறுதிப்போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் பெண்கள் பிரிவில் தமிழ்நாடு அணி முதல் பரிசை வென்றது. அதேபிரிவில் 2-வது பரிசை கர்நாடகாவும், 3-வது பரிசை கேரளாவும் வென்றன. ஆண்கள் பிரிவில் கர்நாடகா அணி முதல் பரிசைப்பெற்றது. 2-வது பரிசை தமிழ்நாடும், 3-வது பரிசை புதுச்சேரியும் பெற்றனர். மேலும் கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அபிஷேக், மேனகா முதல் பரிசையும், கர்நாடகாவைச் சேர்ந்த தனுஷ், லத்திகா 2-வது பரிசையும், புதுச்சேரியைச் சேர்ந்த செல்வகுமார், கீதா 3-வது பரிசையும் வென்றனர். மேலும் 28 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு அணி வென்றது. இந்திய டென்னிகாய்ட் கூட்டமைப்பு தலைவர் டி.எஸ்.பிஷ்ட், ஹட்சன் அக்ரோ தலைவர் சந்திரமோகன், தலைமைப் பயிற்சியாளர் மாரியப்பன் ஆகியோர் வெற்றிபெற்ற வீரர்களுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினர்.


Next Story