கால்வாயில் தத்தளித்தவாறு உடலை தூக்கி சென்ற கிராம மக்கள்

கால்வாயில் தத்தளித்தவாறு  உடலை தூக்கி சென்ற கிராம மக்கள்
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்திருநகரி அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்காக கால்வாயில் தத்தளித்தவாறு கிராம மக்கள் தூக்கி சென்றனர். அங்கு பாலம் அமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்காக கால்வாயில் தத்தளித்தவாறு கிராம மக்கள் தூக்கி சென்றனர். அங்கு பாலம் அமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கால்வாயில் தத்தளித்தவாறு...

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே மழவராயநத்தம் கிராமத்தில் மயானத்துக்கு செல்லும் பாதையின் குறுக்காக கால்வாய் செல்கிறது. மழைக்காலத்தில் இந்த கால்வாயில் தண்ணீர் செல்லும்போது, இறந்தவர்களின் உடலை கால்வாய் தண்ணீரில் தத்தளித்தவாறே கிராம மக்கள் தூக்கி சென்று அடக்கம் செய்கின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் இறந்து விட்டார். நேற்று அவரது உடலை அடக்கம் செய்வதற்காக, கால்வாயின் குறுக்கே கழுத்தளவு தண்ணீரில் தத்தளித்தவாறு கிராம மக்கள் சுமந்து சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர்.

பாலம் அமைக்க...

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, இறந்தவர்களின் உடலை கால்வாய் தண்ணீரில் தத்தளித்தவாறே தூக்கிச் சென்றுதான் அடக்கம் செய்து வருகிறோம்.

எனவே இங்கு கால்வாயின் குறுக்காக பாலம் அமைக்க வேண்டும். இல்லையெனில் மயானத்துக்கு செல்வதற்கு மாற்றுப்பாதை ஏற்படுத்தி தர வேண்டும்'' என்றனர்.

Next Story