சுற்றுலா வேன் கவிழ்ந்து 11 பேர் காயம்
வால்பாறை மலைப்பாதையில் 5-வது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வேன் கவிழ்ந்தது. இதில் 11 பேர் காயம் அடைந்தனர்.
வால்பாறை
வால்பாறை மலைப்பாதையில் 5-வது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வேன் கவிழ்ந்தது. இதில் 11 பேர் காயம் அடைந்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சுற்றுலா வேன்
கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு நேற்று முன்தினம் சென்னை குரோம்பேட்டையில் இருந்து 17 பேர் வேன் ஒன்றில் சுற்றுலா வந்தனர்.
அவர்கள், வால்பாறையில் தங்கி சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து ரசித்தனர்.
இதையடுத்து அவர்கள் வால்பாறையின் கோடைவிழா நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.
அதன்பிறகு அவர்கள் வால்பாறையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர்.
அந்த சுற்றுலா பயணிகளின் வேன் வால்பாறை- பொள்ளாச்சி மலைப்பாதையில் நேற்று வந்து கொண்டு இருந்தது.
11 பேர் காயம்
அந்த வேன் 5-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் தாறுமாறாக ஓடிய வேன் திடீரென்று சாலையில் கவிழ்ந்தது. இதனால் வேனுக் குள் இருந்த பயணிகள் கூச்சல் போட்டனர்.
வேன் கவிழ்ந்ததில் உள்ளே இருந்த 17 பேரில் 11 சுற்றுலா பயணிகள் காயம் அடைந்தனர்.
இதை அறிந்து அந்த வழியாக சென்றவர்கள், விபத்தில் சிக்கிய வேனில் இருந்தவர்களை மீட்டு சிகிச் சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் காடம்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.