சுற்றுலா வேன் கவிழ்ந்து 8 பேர் காயம்
கொடைக்கானல் மலைப்பாதையில், வேன் கவிழ்ந்து 8 பேர் காயம் அடைந்தனர்.
கேரள மாநிலம் சோட்டானிக்கரை பகுதியயை சேர்ந்த 13 பேர், ஒரு வேனில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். வேனை சோட்டானிக்கரையை சேர்ந்த ஜூனு (வயது 25) ஓட்டினார். கொடைக்கானலில் உள்ள பல்வேறு இடங்களை அவர்கள் சுற்றி பார்த்தனர்.
பின்னர் அவர்கள், மோயர்பாயிண்ட் பகுதியில் மலைப்பாதையில் வேனில் சென்று கொண்டிருந்தனர். அங்குள்ள ஒரு வளைவில் வேன் திரும்பியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த ெஜயராஜ் (வயது 35), அனீஸ் (39) உள்பட 8 பேர் காயம் அடைந்தனர். டிரைவர் உள்பட 6 பேர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காயம் அடைந்தவர்களை, சக சுற்றுலா பயணிகள் மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.