சுற்றுலா வாகன டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


சுற்றுலா வாகன டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Dec 2022 12:30 AM IST (Updated: 8 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் சுற்றுலா வாகன டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

கொடைக்கானலில் சுற்றுலா வாகன டிரைவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தியுள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய வாகனங்களை தடை செய்யக்கூடாது. சுற்றுலா வாகன டிரைவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சுற்றுலா வாகன டிரைவர்கள் ஏராளமானவர்கள் கலந்துெகாண்டனர்.


Next Story