தடையை மீறி கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்


தடையை மீறி கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 8 April 2023 6:45 PM GMT (Updated: 8 April 2023 6:46 PM GMT)

தடையை மீறி கடலில் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரை பகுதிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஏராளமான சவுக்கு மரங்கள் மிக உயரமாக வளர்ந்து அழகாக காட்சி அளிக்கின்றன. இங்குவரும் சுற்றுலா பயணிகள் இந்த மரங்களின் நடுவே அமர்ந்து கடற்கரையின் அழகையும் பார்த்து செல்கின்றனர்.

இந்த நிலையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு அரியமான் கடற்கரைக்கு கடந்த 2 நாட்களாக சுற்றுலா பணிகளின் வருகை அதிகமாகவே உள்ளது. நேற்று அரியமான் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடல் சீற்றமாக இருப்பது தெரிந்தும் தடையை மீறி ஆபத்தை அறியாமல் கடலில் இறங்கி குளித்த்தனர். குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள் என பலர் கடலில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். ஏற்கனவே இதுபோன்று ஆபத்தை அறியாமல் தடையை மீறி கடலில் இறங்கி குளித்த சுற்றுலா பணிகள் பலர் இந்த பகுதியில் கடலில் மூழ்கி இறந்து போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story