ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி


ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
x

கடந்த 3 நாட்களாக ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை வித்திக்கப்பட்டிருந்தது

பென்னாகரம்,

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்வார்.

இந்த நிலையில், நீர்வரத்து அதிகரிப்பால் கடந்த 3 நாட்களாக ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை வித்திக்கப்பட்டிருந்தது .இந்த நிலையில் தற்போது ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க ,பரிசல் இயக்க மீண்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

1 More update

Next Story