ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x

ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பென்னாகரம்,

ஒகேனக்கல் அருவி தமிழ்நாட்டின் காவிரி ஆற்றில் அமைந்துள்ளது. இது தருமபுரியில் இருந்து 46 கி.மீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இங்குள்ள ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து, பரிசல் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த சூழலில் கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நீர்வரத்து அதிகரிப்பால் ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அருவிக்கு வரும் நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளதால் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story