தடுப்பணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
தடுப்பணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணைக்கு எதிரே பள்ளிவிளங்கால் என்ற தடுப்பணை உள்ளது. இங்கு சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் இறங்கி குளிப்பது வழக்கம். ஆனால் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு சுழல், சேறு, சகதி இருக்கும் இடம் சரிவர தெரியாததால், அதில் சிக்கி இறக்க நேரிடுகிறது.
இந்த நிலையில் போலீசார் சார்பில் தடுப்பணையில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. அதில், ஆழியாறு, மயிலாடுதுறை பகுதி ஆற்றுப்படுகைகள் மற்றும் அணை கட்டுகளில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆழம், சுழல் இருக்கும் இடம் தெரியாமல் குளித்து வருகின்றனர். இதனால் துயர சம்பவங்கள் நடைபெறுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அணைக்கட்டு பகுதிகளில் இறங்க வேண்டும். இந்த இடத்தில் குளிக்க தடை செய்யப்பட்டு உள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.