மேட்டூர் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்


மேட்டூர் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 27 Jun 2022 12:55 AM IST (Updated: 27 Jun 2022 11:12 AM IST)
t-max-icont-min-icon

விடுமுறைநாளையொட்டி மேட்டூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சேலம்

மேட்டூர்:

விடுமுறைநாளையொட்டி மேட்டூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.விடுமுறைநாளையொட்டி மேட்டூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

அணைக்கட்டு முனியப்பன்

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்குள்ள அணை, அணை பூங்கா உள்ளிட்ட இடங்களை சுற்றிபார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று விடுமுறைநாளையொட்டி மேட்டூர் அணை பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதில் சிலர் பூங்கா அருகே உள்ள அணைக்கட்டு முனியப்பன் கோவிலுக்கு சென்று ஆடு, கோழி, பலியிட்டு பொங்கல் வைத்து முனியப்ப சாமிக்கு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பாதுகாப்பு

பின்னர் தாங்கள் கொண்டு வந்த உணவு பொருட்களை சமைத்து பூங்காவிற்குள் எடுத்து சென்று நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமிகள் பூங்காவில் உள்ள விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவில், பூங்கா ஆகிய பகுதிகளில் மக்கள் கூட்டமாக காட்சியளித்தது. ஒரு சிலர் காவிரி ஆற்றில் குளித்தனர். இதன் காரணமாக மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே உள்ள காவிரி ஆறு படித்துறைகளில் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது. மேட்டூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story