கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்


கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 8 Sept 2023 2:00 AM IST (Updated: 8 Sept 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. மாறாக பெரும்பாலான நேரங்களில் வெயில் அடித்து வருகிறது. சில நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் இதமான காலநிலை நிலவுகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று சென்னை உள்பட வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா உள்பட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் சாரல் மழையில் கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் ஆற்றில் மீன் பிடித்து அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்யும். அதனால் சுற்றுலா பயணிகள் வருகை மிக குறைவாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மழை குறைந்ததால், வழக்கத்துக்கு மாறாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story