கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 19 Feb 2023 7:00 PM GMT (Updated: 19 Feb 2023 7:00 PM GMT)

வார விடுமுறையை யொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

திண்டுக்கல்

குவிந்த சுற்றுலா பயணிகள்

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக வார விடுமுறை நாட்களில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

வார விடுமுறையையொட்டி நேற்று தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் கொடைக்கானலில் வந்து குவிந்தனர். இதனிடையே கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெப்பமும், இரவு நேரத்தில் கடும் குளிரும் நிலவி வந்தது. நேற்று முன்தினம் உறைபனி ஏற்பட்டது.

படகு சவாரி

இந்நிலையில் நேற்று பகலில் வெப்பம் குறைந்து இயல்பான சூழ்நிலை காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரி, குணா குகை, மோயர் பாயிண்ட், பில்லர் ராக்ஸ் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

பின்னர் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்ததுடன், ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரி போன்றவற்றில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக ஈடுபட்டனர். பின்பு அவர்கள் பிரையண்ட் பூங்கா சென்று அங்கு பூத்துள்ள பூக்களையும் பார்த்து ரசித்தனர். பூங்காவில் சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


Related Tags :
Next Story