கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 18 Jan 2023 12:30 AM IST (Updated: 18 Jan 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

காணும் பொங்கலையொட்டி கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர்.

தேனி

பெரியகுளம் அருகே இயற்கை எழில் சூழ மேற்கு மலைத்தொடர்ச்சி அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கின்றனர். நேற்று காணும் பொங்கலையொட்டி தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று காலை முதலே வந்து குவிந்தனர். அவர்கள் அருவி பகுதியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். நேற்று மாலை வரை சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அதேபோன்று பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைக்கும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் சென்று வந்தனர்.


Next Story