பூலாம்பட்டி கதவணைக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்


பூலாம்பட்டி கதவணைக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 14 Aug 2023 1:00 AM IST (Updated: 14 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

எடப்பாடி:-

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை சுற்றுலா தளத்தில் நேற்று விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள நீர்மின் உற்பத்தி நிலையம், பொழுதுபோக்கு பூங்கா மற்றும் படகு துறை, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளை சுற்றிபார்த்தனர். தொடர்ந்து கதவணை நீர்த்தேக்கப் பகுதியில் திரளான சுற்றுலா பயணிகள் விசைப்படகு சவாரி செய்து, காவிரி கரையோர பகுதியில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை கண்டுரசித்தனர். சுற்றுலா பயணிகள் படையெடுப்பால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story