அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்; ஆனந்தமாக குளித்தனர்
அகஸ்தியர் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் ஆனந்தமாக குளித்து சென்றனர்.
விக்கிரமசிங்கபுரம்:
அகஸ்தியர் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்தமாக குளித்துச் சென்றனர்.
அகஸ்தியர் அருவி
பாபநாசத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிரசித்திபெற்ற அகஸ்தியர் அருவி உள்ளது, இந்த அருவியில் ஆண்டுதோறும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதாலும், ஆன்மீக அருவியாக இருப்பதாலும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து செல்கின்றனர்.
அகஸ்தியர் அருவிக்கு செல்லும் வழியில் பாபநாசத்தில் வனத்துறை சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் வாகனங்கள் முழுவதும் சோதனை செய்த பிறகே மலைப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவிக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனந்த குளியல்
இந்த நிலையில் நேற்று விடுமுறை தினம், கோடை வெயில் மற்றும் குற்றாலத்தில் நீர்வரத்து குறைவு எதிரொலியாக வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்களது கார் மற்றும் வேன்களில் அகஸ்தியர் அருவிக்கு குளிக்க குவிந்தனர். தொடர்ந்து அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததால் சோதனை சாவடியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று ஆமை போல ஊர்ந்து ஊர்ந்து சென்றன. இதனால் பாபநாசம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.