கோபி அருகே கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோபி அருகே கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஈரோடு
கடத்தூர்
கோபி அருகே உள்ள பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடும்போது கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.
அப்போது சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளித்து மகிழ்வார்கள். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story